Connect with us

CINEMA

பொண்ணுங்க பண்ணா தப்பு, ஆம்பளைங்க பண்ணா..? இரண்டாவது திருமணம் & முன்னாள் கணவர் Sandy குறித்து மனம் திறந்த காஜல்..

காஜல் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கோ படத்தில், தீவிரவாத கும்பலில் ஒரு பெண் போராளியாக இருப்பார். கலகலப்பு 2 படத்தில், டிவிடி கணேஷை, யோகி பாபுவை அடித்துக் கொண்டே இருப்பார். விவேக் காமெடியிலும் இருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். டான்ஸ் மாஸ்டர் சாண்டிதான் இவரது கணவர். ஆனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சாண்டி மாஸ்டர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விட்டார். ஆனால், காஜல் சமீபத்தில் 2வது திருமணம் நடந்ததாக பிராங்க் செய்ததை அவரே ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

   

சமீபத்திய நேர்காணலில் காஜல் கூறியதாவது, நான் பொசஸிவ் டைப். என் கணவர் எனக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பவர். அதுபோல், என்னையும் கணவர் நினைத்தால், எனக்கும் அந்த பொசஸிவ் மிக பிடிக்கும். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கை அமையாததால், சாண்டியை பிரிந்துவிட்டேன். பொண்ணுங்க பண்ணினா தப்பு, பசங்க பண்ணினா தப்பில்லையா. சாண்டியை விஜய் படத்தில் நடித்தால், அழைத்துப் போய் விஜயிடம் அறிமுகப்படுத்த சொன்னேன். கடைசி வரை செய்யவே இல்லை. நான் விஜய் மீது தீவிரமான காதல் கொண்டவள். அவர் மீது எனக்கு கிரஷ் அதிகம்.. அவரை ரொம்பவும் பிடிக்கும்.

எனக்கு 2வது திருமணம் என்பது நானே கிளப்பிவிட்ட வதந்தி. சோஷியல் மீடியாவில் என்னை பற்றிய பரபரப்புக்காக நானே அந்த மாதிரி செய்தேன். இனிமேல் 2வது திருமணத்துக்கு வாய்ப்பே இல்லை. யாராவது வந்தால் லிவிங் டு கெதரில் வாழ மட்டுமே சம்மதிப்பேன். யாராக இருந்தாலும் அதற்கு எனக்கு சம்மதம்தான். குழந்தை எல்லாம் தத்தெடுத்து வளர்க்க விருப்பமில்லை. என் வீட்டில் உள்ள சின்ன நாய்க்குட்டிதான் எனக்கு குழந்தை. சாண்டி பொறமை பிடித்தவர். லியோ படத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. அவரிடம் நிறைய திறமை உள்ளது, என தனது மாஜி கணவர் குறித்து வெளிப்படையாக அதில் பேசி இருக்கிறார் காஜல்.

#image_title

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top