#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. இவர் எப்போதுமே சிரித்த முகமாகவே இருப்பார். கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தான். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் முரளி நடித்த ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் கௌசல்யா என மாற்றிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் விஜய், கார்த்திக், பிரஷாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். ஆனால் ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அதுமட்டுமின்றி, சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், திடீரென சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்தார். தற்பொழுது வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் பிசியாக நடித்து வருகிறார்.
#image_title
இந்நிலையில் தற்போது சன் டிவியின் ‘சுந்தரி 2’ சீரியலில் கௌசல்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கலெக்டர் பதவியை சுந்தரி ராஜினாமா செய்ய முடிவெடுக்கும் நிலையில், அவருக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் தான் அவரது கதாபாத்திரம் உள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ….
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…