சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் களமிறங்கும் 90’ஸ் பிரபல நடிகை கெளசல்யா… அவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா..?

By Begam on மாசி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. இவர் எப்போதுமே சிரித்த முகமாகவே இருப்பார். கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தான். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் முரளி நடித்த ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் கௌசல்யா என மாற்றிக் கொண்டார்.

   

இதைத்தொடர்ந்து அவர் விஜய்,  கார்த்திக், பிரஷாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். ஆனால்  ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அதுமட்டுமின்றி, சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

   

 

கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், திடீரென சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்தார். தற்பொழுது வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் பிசியாக நடித்து வருகிறார்.

#image_title

இந்நிலையில் தற்போது சன் டிவியின் ‘சுந்தரி 2’ சீரியலில் கௌசல்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கலெக்டர் பதவியை சுந்தரி ராஜினாமா செய்ய முடிவெடுக்கும் நிலையில், அவருக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் தான் அவரது கதாபாத்திரம் உள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ….