“வயிற்று வலி என சென்ற சிறுமி”… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை….!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி – மலர்க்கொடி தம்பதியினர், நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத நிலையில் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இருவரும் வேலைக்குச் சென்றதால், அந்தச் சிறுமி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதை அந்தச் சிறுமி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த வாரம் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, சிறுமிக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்திற்கும், சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடியாத்தம் தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்ற கட்டிட மேஸ்திரி, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கமலேஷைக் கைது செய்தனர். ஆனால், காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கமலேஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், கமலேஷ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அங்கு விரைந்தனர். பெங்களூர் கே.ஆர். புரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த கமலேஷை மடக்கிப் பிடித்த போலீசார், அவரை மீண்டும் குடியாத்தம் அழைத்து வந்து சிறையிலடைத்தனர். ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

27 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

37 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

52 minutes ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago