மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த கங்கா என்ற 72 வயது மூதாட்டி தன் மகனுக்காக கிட்னியை தானம் செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. கங்கா என்ற மூதாட்டிக்கு கமலேஷ் (46) என்ற மகன் உள்ளார். இவர் கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மகனுக்காக தனது கிட்னியை தானமாக வழங்க கங்கா முன் வந்தார். அவரின் இரண்டு கிட்னிகளும் நல்ல நிலையில் உள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமாக கங்காவின் ஒரு கிட்னி மகனுக்கு பொருத்தப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பெற்ற பிள்ளைக்காக தாய் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார் என்பதற்கு இந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…