#image_title
தமிழ் சினிமாவில் பிரபல புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நெப்போலியன். 1990களில் புகழின் உச்சியில் இருந்தவர் நெப்போலியன். கிராமத்துக் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் அனைத்திலும் நெப்போலியன் நடித்திருப்பார்.
இவரது உடல் தோற்றமும் முறுக்கு மீசையும் பிரபலமாக ஆனது. நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
தனுஷ் குணால் என இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் இதில் மூத்த மகன் தனுஷ் சிறுவயதிலேயே தசை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இவரால் எழுந்து நடமாட முடியாது. வீழ்சேரிலே தான் வாழ்க்கை இருக்கும். இவருக்கு வந்திருக்கும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டதால் 20 வயதிற்கு மேல் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
ஆனால் தடைகளை தாண்டி தனது மகனை ஓரளவு குணப்படுத்திவிட்டார் நெப்போலியன். இன்று ஜப்பானில் நடிகர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமண நிகழ்ச்சியில் மதிய விருந்து நெப்போலியன் எந்த அளவுக்கு பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்பதை இனி காண்போம்.
நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ் அக்ஷயா ஆகியோரின் திருமணத்திற்கு மதிய விருந்துக்கு செட்டிநாடு முறைப்படி நம் தமிழ் கலாச்சார முறைப்படி ராஜ விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார். மொத்தம் 70 வகை உணவுகள் இந்த விருந்தில் இடம்பெற்று இருக்கிறது. ஜப்பானில் திருமணம் என்றால் அதை நடத்துவது அவ்வளவு எளிது கிடையாது. நம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் உணவுக்கு ஏற்ப ஒவ்வொரு பொருளும் ஜப்பானில் கிடைக்காது. எல்லாமே விலை அதிகமாக இருக்கும்.
நெப்போலியனின் மூத்த மகனின் கனவுநாடு ஜப்பான். அங்கு தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பியதால் தன் மகனுக்காக எதையும் செய்வேன் என்று நினைத்த நெப்போலியன் திருமண விருந்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தாராம். இந்தியாவிலிருந்து ராசிபுரத்து நெய். முதல் வகுப்பு பெருங்காயம், வாழை மரம் வரை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு வரவழைத்து இருக்கிறார். பிரண்டை குழம்பு டார்கிஸ் இனிப்பு என பல ஸ்பெஷல் ஐட்டங்கள் இந்த திருமண விருந்தில் இடம்பெற்று இருக்கின்றது. விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்தி வயிறார சாப்பிட்டு சென்று இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…
பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு ரம்மியமான உல்லாச விடுதிக்குச் சுற்றுலா சென்ற ஐந்து நண்பர்கள் கொண்ட…
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…