#image_title
இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் சிக்கிமில் அமைந்திருக்கும் ராப்டென்சே. இந்த இடத்தை தொலைந்த நகரம் என்றும் கூறுகிறார்கள். இதன் வரலாறு என்ன எப்படி உருவானது என்பதை பற்றி இனி காண்போம்.
மலைகள் காடுகள் பள்ளத்தாக்குகள் குன்றுகள் என அழகின் உருவமாக இருக்கும் சிக்கிமில் தொலைந்து போன ஒரு நகரம் இருக்கிறது. அந்த இடம் தான் ராப்டென்சே. இந்த இடங்களை பார்வையிடும் போது நம் இந்திய நாடு எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருந்தது என்பது நமக்கு புரியும்.
சிக்கிம் மாநிலத்தின் மேற்கு மாவட்டத்தில் பெல்லிங்கின் அருகே அமைந்துள்ள ராப்டென்சே.14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிக்கிம் பேரரசின் தலைநகராக ராப்டென்சே இருந்தது. பிற்காலத்தில் கோர்க்காக்களால் இந்த நகரம் அழிக்கப்பட்டது. தற்போது ராப்டென்சே அதன் பாழடைந்த கட்டமைப்பை மட்டுமே நம்மளால் பார்க்க முடியும்.
இருப்பினும் வரலாற்று ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கியமான இடமாகும். இந்த ராப்டென்சே மலையின் உச்சியில் அமைந்து இருப்பதால் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களின் அற்புதமான காட்சிகளை நம்மால் பார்த்து ரசிக்க முடியும். இங்கே அமைந்திருக்கும் கட்டமைப்பு மன்னர் காலத்தில் எப்படி வந்தார்கள் என்பதை எடுத்துச் சொல்லும். சுற்றுலா பயணிகளுக்கு இங்கு அனுமதி உண்டு. சிக்கிம்க்கு சுற்றுலா சென்றால் கண்டிப்பாக இந்த ராப்டென்சேவை பார்வையிடுங்கள்.
தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…