காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!.. அதிகாலை 3 மணிக்கு கதறல் சத்தம்.. தூங்கிக் கொண்டிருந்த 2 பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றிய 60 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!!

Spread the love

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், கோபாலபுரத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு சாந்தி, அவரது உறவினர் ஸ்ரீதேவி (45), மற்றும் சாந்தியின் மகன், மகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கோடைகாலம் என்பதால் சாந்தியும் ஸ்ரீதேவியும் வீட்டின் கதவைச் சிறிது திறந்து வைத்துவிட்டு, வாசலுக்கு அருகே படுத்துத் தூங்கியதாகத் தெரிகிறது.

அதிகாலை 3 மணி அளவில் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றியுள்ளார். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் அந்த நபர் தீயை பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரின் உடலிலும் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சாந்தியின் மகன் சந்தீப்குமார் (16), தீயை அணைத்து இருவரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தான். பலத்த தீக்காயமடைந்த இருவரும் உடனடியாக அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இக்கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்த முத்து (60) என்பவர்தான் பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் முத்துவைக் கைது செய்து, இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

8 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

9 மணத்தியாலங்கள் ago