மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்காக பெற்ற மகளையே தாய் படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி என்ற பெண், தனது கணவனின் நண்பருடன் சட்டவிரோத உறவில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், தனது 6 வயது சிறுமியையும் அழைத்துக் கொண்டு கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழச் சென்றுள்ளார்.
அங்கே தங்கியிருந்த சிறுமி, தனது தாத்தா-பாட்டி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து அடம்பிடித்துள்ளார். இதனால் அச்சமடைந்த ஜோதி, சிறுமி தாத்தா வீட்டிற்குச் சென்றால் தங்கள் கள்ளத்தொடர்பு குறித்து வெளி உலகிற்கு உண்மையைக் கூறி விடுவாள் என்று பயந்துள்ளார். இதையடுத்து, காதலனுடன் இணைந்து அந்த பிஞ்சு என்றும் பாராமல் மகளைக் கொடூரமாகக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
திட்டமிட்டபடி, ஜோதியும் அவரது காதலனும் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைப்பதற்காகச் சிறுமியின் உடலை அருகில் இருந்த ஒரு கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஜோதி மற்றும் அவரது காதலனைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…