ரூ.400 கோடி கல்வித்துறை லஞ்ச மோசடி வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சரவணன் தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாக சரணடைந்துள்ளார். ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்குவதற்காகப் பெருந்தொகை லஞ்சமாகப் பெறப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு சுடிகளும் அவிழ்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய நபரான முத்துக்குமாரும் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அன்பில் சட்டப்போராட்டம் நடத்தி ஜாமீனில் வெளிவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வழக்கில் தொடர்புள்ள முக்கிய நபர்கள் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்து வாக்குமூலம் அளித்து வருவது, அன்பிலுக்கு ஜாமீன் கிடைப்பதில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்தத் தொடர் சரணடைவுகள் மற்றும் விசாரணை வளையங்கள் இறுக்கமடைந்து வருவது, ஆளுங்கட்சியான திமுகவின் தலைமைக்கும் பெரும் அரசியல் அதிர்ச்சியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…
பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு…