அம்மா இல்லாத 4 பிள்ளைகள்…! ஒரே ஆளாக கவனித்து வந்த தந்தையும் இறப்பு… “உடலை அடக்கம் செய்ய முடியாமல்…” கிராம மக்களின் செயல்…!!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (46). ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த இவருக்கு, லாவண்யா, ரீனா, ரிஷிகா என்ற 3 மகள்களும், அபினேஷ் என்ற மகனும் உள்ளனர். கமலக்கண்ணன் கூலி வேலை செய்து நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தார்.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு சிறுநீரகப் பாதிப்பால் கமலக்கண்ணன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தின் ஒரே வருமானம் பாதிக்கப்பட்டதால், பொறியியல் படித்து வந்த மூத்த மகள் உட்பட மூன்று பிள்ளைகளும் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன், கடந்த நவம்பர் 14ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே தாயை இழந்த நான்கு பிள்ளைகளும், தந்தையின் உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் நிர்கதியாக நின்றனர். உறவினர்கள் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவர்களாலும் உதவ முடியவில்லை.

இந்த சூழலில், பரிதவித்த குழந்தைகளின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய கிராம மக்கள், அவர்களே முன்வந்து வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி, கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்தனர். பெற்றோரை இழந்து, கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago