கோயம்புத்தூர் கொடிசியா (CODISSIA) மைதானத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ‘ஸ்கை டைனிங்’ (Sky Dining) உணவகத்தை அமைத்திருந்தது. இதில் உணவருந்தச் சென்ற 20 நபர்கள், சுமார் 90 அடி உயரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்தரத்தில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஹைட்ராலிக் லிஃப்ட் மற்றும் ஏணிகளைப் பயன்படுத்தி 20 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், நீண்ட நேரம் உயரத்தில் சிக்கியிருந்ததால் பலரும் அச்சமடைந்தனர். இயந்திரத்தின் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…