பால் வாங்க சென்ற தாய்… வீட்டில் தனியாக இருந்த 2 வயது குழந்தை… திரும்பி வந்தபோது பாத்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி…!

Spread the love

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டு குளியல் அறையில் வைக்கப்பட்டிருந்த வாலி தண்ணீரில் தலைகீழாக விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வழிவீடு முருகன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார் மற்றும் வைதேகி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் கிருத்விகா முத்ரா என்ற மகள் இருந்துள்ளார். சுரேஷ்குமார் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று வழக்கம்போல அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும் குழந்தையும் மட்டும் இருந்துள்ளனர். இதனிடையே சுரேஷ்குமாரின் மனைவி வைதேகி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றுள்ளார்.

பிறகு திரும்பி வந்து பார்த்தபோது இரண்டு வயது மகள் வீட்டு பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த வாலியில் இருந்து தண்ணீரில் தலைகீழாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைதேகி உடனையே குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை பாத்ரூமில் இருந்த வாலியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

காவிரி விவகாரத்தில் அதிரடி திருப்புமுனை…! முதல்வர் விஜயை சந்திக்கும் கர்நாடக முதல்வர்… ஆகஸ்ட் 20-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்…!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வரும் வியாழக்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை சென்னையில் நேரில்…

4 minutes ago

அட கொடுமையே… பொதுமக்கள் மத்தியில் கொடூர சண்டை… நடுரோட்டில் கட்டிப் புரண்டு அடித்துக் கொண்ட இளம் பெண்கள்… இணையத்தில் வைரல் வீடியோ…!!

பெங்களூருவின் புகழ்பெற்ற கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரு இளம் பெண்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வார…

6 minutes ago

“நீ உன் வேலைய பாரு!”… மேடையிலேயே அனுபமாவை அவமானப்படுத்தினாரா துருவ் விக்ரம்?… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!!

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

6 minutes ago

அட கடவுளே… வயிற்றுக்குள்ள 500 கட்டிகளா?… அதிர்ந்துபோன மருத்துவர்கள்… 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்… பெண்ணுக்குக் கிடைத்த மறுபிறவி…!

ஆக்ராவில் உள்ள டாக்டர் கம்லேஷ் டாண்டன் மருத்துவமனை, IVF மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தில் மிகச் சிக்கலான மற்றும்…

11 minutes ago

“செம சூப்பர் பாஸ்”… சங்கீதா மீதான காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தளபதி விஜய்… இணையத்தை அதிரவைக்கும் பழைய பேட்டி…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள…

19 minutes ago

நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு செக்…! இனி சமரச பேச்சுக்கு இடமில்லை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் மரிய வில்சனுக்கும், புதுச்சேரியில் வசிக்கும் அவரது தம்பி மரிய கிளோத்துக்கம் இடையே நீண்டநாட்களாகச்…

20 minutes ago