தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசார பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுவாமி என்பவருக்கும், ஜோதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஹரிகிருஷ்ணா என்ற மகனும் இருந்தனர். திருமணமான சில மாதங்களிலேயே ஜோதிக்கு, தீகுலா கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ளக்காதல் உறவாக மாறியுள்ளது. கணவர் சுவாமி அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களைப் பயன்படுத்திக் கொண்ட ஜோதி, தனது கள்ளக்காதலன் நவீனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தனிமையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம் போல கடந்த மே 29-ஆம் தேதி சுவாமி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஜோதி நவீனைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்தபோது, ஜோதியின் 2 வயது மகன் ஹரிகிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோதியும், கள்ளக்காதலன் நவீனும் சேர்ந்து பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையைச் சரமாரியாகத் தாக்கி தூக்கி வீசியுள்ளனர். இதில் தலையில் பலத்த ரத்தக்கசிவு ஏற்பட்டு குழந்தை உயிருக்குப் போராடியதை அடுத்து, இருவரும் பதற்றத்துடன் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கொலையை மறைப்பதற்காக, ஜோதி தனது கணவர் சுவாமிக்கு போன் செய்து, குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய சுவாமி, பதறியடித்து வீடு திரும்பிக் குழந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அடக்கம் பண்ணியுள்ளார். ஆனால், சில நாட்களிலேயே ஜோதியின் நடத்தையில் சுவாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் சுவரில் இருந்த ரத்தக்கறையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்டு அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தை இறந்ததாகக் கூறப்பட்ட நாளில் ஜோதி நவீனுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றியது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுவாமி, ஜோதியிடம் இதுகுறித்து நியாயம் கேட்க, அவர் முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூன் 19-ஆம் தேதி சுவாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜோதி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜோதியைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள நவீனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்காகப் பெற்ற தாயே 2 வயது மகனைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…