“அவர் என் சொந்தக்காரர்”… கணவரிடம் பொய் சொன்ன மனைவி…. வாட்ஸ்அப்பில் வந்த ‘அந்த’ வீடியோ… அடுத்த நொடியே நடந்த சோக சம்பவம்….!

Spread the love

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அபய் குமார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திவிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் குடும்பத்தினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதியினர் ஜெய்ப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், இவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கை நீடிக்கவில்லை.

ஜெய்ப்பூரில் வசித்து வந்தபோது, திவிஷாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது. கணவருக்குத் தெரியாமல் பழகி வந்த திவிஷா, ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலனை ‘சொந்த உறவினர்’ என்று கணவர் அபய் குமாரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால், அபய் குமார் வேலைக்குச் சென்ற நேரத்திலும், வீட்டில் இருக்கும் சமயங்களிலும் அந்த நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து திவிஷாவுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல, மனைவியும் அந்த நபரும் பழகும் விதம் அபய் குமாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியின் நடத்தையை அவர் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார். இதற்கிடையில், திவிஷா தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டில் அபய் குமார் தனியாக இருந்த நேரத்தில், அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வந்தது. அதில், திவிஷா தனது கள்ளக்காதலனுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்த அபய் குமார் சொல்லொணா மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்த அபய் குமார், உடனடியாக ஜெய்ப்பூரில் இருந்து பீகாரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்று குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கியுள்ளார். எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை காலை யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், வேகமாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அபய் குமாரின் அறையிலிருந்து ஒரு தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், “என் மனைவி வேறொருவனுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்; என் மரணத்திற்கு அவள் மட்டுமே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

6 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

6 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

7 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

7 மணத்தியாலங்கள் ago