தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான்.
தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் குசும்பு பிடித்தவர். இவர் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் உடனே பகிர்ந்து விடுவார். சமீபத்தில் கூட இவர் தனது மனைவி மஹாலஷ்மியை பிரிய போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.
இதைத் தொடர்ந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்றெல்லாம் கூட வதந்திகள் பரவியது. இவை அனைத்திற்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்து இருந்தார் ரவீந்தர். தற்பொழுது ரவீந்தரும், மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து தங்களது முதல் திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர். இதைத்தொடர்ந்து காதல் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி ரொமான்டிக்கான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவீந்தர். இதோ அந்த பதிவு…
தமிழ்நாட்டில் உள்ள தகுதியான அனைத்து திருநங்கைகளுக்கும் தங்கு தடையின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு…
பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு ரம்மியமான உல்லாச விடுதிக்குச் சுற்றுலா சென்ற ஐந்து நண்பர்கள் கொண்ட…
சென்னை போரூர் அருகே மகள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு…
தென்மேற்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் தமிழகத்தில்…
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின்…