‘எப்படி சொல்ல?.. 1 வருஷம் முடிஞ்சு போச்சு ‘… 1st anniversary… காதல் மனைவி மஹாலக்ஷ்மியை நினைத்து உருகி உருகி பதிவு வெளியிட்ட ரவீந்தர்… 

By Begam on புரட்டாதி 2, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

   

ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் தான்.

   

 

தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் குசும்பு பிடித்தவர். இவர் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொள்ளும் அனைத்து புகைப்படங்களையும் இணையத்தில் உடனே பகிர்ந்து விடுவார். சமீபத்தில் கூட இவர் தனது மனைவி மஹாலஷ்மியை பிரிய போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.

இதைத் தொடர்ந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை என்றெல்லாம் கூட வதந்திகள் பரவியது. இவை அனைத்திற்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்து இருந்தார் ரவீந்தர். தற்பொழுது ரவீந்தரும், மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து தங்களது முதல் திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.  இதைத்தொடர்ந்து காதல் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி ரொமான்டிக்கான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.  இதோ அந்த பதிவு…