ஷாக் நியூஸ்!… “இந்தியாவில் புற்றுநோயால் 17,000 குழந்தைகள் பலியா?”… குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றி லான்செட் விடுத்த எச்சரிக்கை… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

Spread the love

இந்தியாவில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக அமையும் 10 காரணிகளில் புற்றுநோய் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ‘தி லான்செட்’ மருத்துவ இதழின் ‘சுமையாகும் உலகளாவிய நோய்கள் – 2023’ ஆய்வின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 3.77 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.44 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. உலக அளவில் தட்டம்மை, காசநோய் மற்றும் எச்.ஐ.வி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக, குழந்தைப் பருவ இறப்புகளுக்குப் புற்றுநோய் எட்டாவது முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவ இறப்புகளுக்கான காரணங்களில் புற்றுநோய் 10-வது இடத்தில் உள்ளது. உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமார் 20.5% தெற்காசியாவிலேயே நிகழ்கிறது என்பது கவலைக்குரிய விஷயம். இதில் இந்தியாவின் பங்கு மட்டும் 12 சதவீதமாக உள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 17,000 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய், மூளை மற்றும் நரம்பு மண்டலப் புற்றுநோய்கள், நிணநீர் மண்டலப் புற்றுநோய்கள் ஆகியவை குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

புள்ளிவிவரங்கள் அச்சமூட்டும் வகையில் இருந்தாலும், ஒரு ஆறுதலான விஷயமாக 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் குழந்தைப் பருவ புற்றுநோய் இறப்பு விகிதம் 16.9% குறைந்துள்ளது. இது உலகளாவிய இறப்பு விகிதச் சரிவுடன் ஒத்துப்போகும் ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள் மற்றும் ஆரம்பக்கால கண்டறிதல் நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் பாதிப்பின் வீரியம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

தற்போது இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு 10 லட்சம் குழந்தைகளில் சுமார் 80 முதல் 100 குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், முறையான சிகிச்சை மூலம் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடிவது ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்கியுள்ளது. எனினும், இந்தியா மற்றும் தெற்காசியப் பகுதிகளில் நிலவும் இந்தச் சுகாதாரச் சவாலை எதிர்கொள்ள கூடுதல் விழிப்புணர்வும், மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்புகளும் அவசியம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் நமக்கு எச்சரிக்கையாக உணர்த்துகின்றன.

Muthu Mani

Recent Posts

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

8 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

15 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

19 minutes ago

மரண விளிம்பில் 192 மணி நேரம்…. 8 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வந்த அதிசயம்….. வெனிசுலாவையே கண்ணீரில் நனைய வைத்த மீட்புச் சம்பவம்….!

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், அங்கிருந்து கிடைத்துள்ள ஒரு…

25 minutes ago

“இனி கோயில்களில் லஞ்சம் கொடுத்தால்.. ஒரே ஒரு இ-மெயில் போதும்”…. ஆன்மிகத் தலங்களில் இனி ‘ரூல்ஸ்’ வேற… கோயில் கொள்ளையர்களுக்கு செக் வைத்த அமைச்சர் ரமேஷ்….!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில்…

32 minutes ago