மத்தியப் பிரதேச மாநிலம் பார்வானி மாவட்டத்தில், 7 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இரவு, தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை அச்சிறுவன் கடத்திச் சென்று, இந்திரா சாகர் கால்வாய் பகுதியில் வைத்து இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான். அப்போது சிறுமி வலியால் அலறியதால் பயந்துபோன அந்தச் சிறுவன், அவளை அங்கிருந்த கால்வாயில் வீசிக் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
காணாமல் போன சிறுமியைத் தேடி வந்த போலீசார், கால்வாயிலிருந்து அவளது சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சிறுமியின் உறவினரான அந்த 17 வயது சிறுவன் ராஜ்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…