ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள நவோதயா வித்யா நிகேதன் பள்ளியில் 16 வயதான ஜான்வி என்ற மாணவி பயின்று வந்தார். செவ்வாய்க்கிழமை அன்று பள்ளியில் பிரியாணி சாப்பிட்டதற்காக அந்த மாணவிக்குத் தண்டனை வழங்கப்பட்டு, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் காலை 11 மணியளவில் துணை முதல்வரின் அறைக்குச் சென்ற ஜான்வி, சுமார் 2 மணி நேரம் கழித்து மதியம் 1:30 மணிக்கே அங்கிருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவர் நேரடியாகப் பள்ளியின் 3-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். படுகாயமடைந்த மாணவியைப் பி.கே. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த 2 மணி நேரத்தில் துணை முதல்வர் அறையில் என்ன நடந்தது, என்ன மாதிரி தண்டனை கொடுக்கப்பட்டது என்று மாணவியின் தந்தை பிரமோத் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகம் தங்களுக்குத் தாமதமாகவே தகவல் தெரிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…