“என் மகனை காதலிக்க உனக்கு என்ன தகுதி?”… காதலன் வீட்டார் நடத்திய தாக்குதலால் 15 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் காதல் விவகாரத்தால் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ரஜினி – கோமதி தம்பதியரின் கடைசி மகளான தர்ஷினி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது இளைஞர் நித்தின் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களது காதல் விவகாரம் நித்தினின் பெற்றோருக்குத் தெரியவந்தது.

காதல் விவகாரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியது. நித்தினின் தாய் ரேவதி மற்றும் அவரது சகோதரி இலக்கியா ஆகியோர், தர்ஷினியைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் இரு வீட்டாரும் மோதிக்கொண்டனர். அப்போது ரேவதியும் இலக்கியாவும் தர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, “என் மகனை காதலிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டு மாணவியை சரமாரியாகத் தாக்கியதுடன், மிகக் கேவலமான சொற்களால் அர்ச்சனை செய்துள்ளனர்.

இந்த மோதலின் போது ஏற்பட்ட காயங்களுக்காக ரேவதி மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், காதலனின் குடும்பத்தினர் ஊர் அறியத் தன்னை அவமானப்படுத்தியதால் தர்ஷினி மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் மனமுடைந்த சிறுமி, யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகளை மீட்டுப் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து உடனடியாகக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜோலார்பேட்டை போலீசார், தர்ஷினியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்குத் தூண்டியதாக இளைஞர் நித்தின், அவரது தாய் ரேவதி மற்றும் சகோதரி இலக்கியா ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சிறுமியின் உயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம் சக்கரகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து வயதே ஆன பள்ளி மாணவி ஒருவரின் வாழ்க்கை இப்படிச் சிதைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை மண்டியிடச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

9 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

16 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

30 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

32 minutes ago

அப்படியே அம்மாவை காப்பி அடிக்கும் குட்டி..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் குரங்கின் வீடியோ…. பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மை.. வியந்துபோன நெட்டிசன்ஸ்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…

35 minutes ago

இது வெறும் சூட்கேஸ் இல்ல.. உள்ளே இருந்த பொருள்… மருமக்களுக்காக மாமியார் செய்த செயல்.. இப்படியொரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…

38 minutes ago