தென்காசி மாவட்டம் உடையாம்புளி பகுதியில் வசித்து வருபவர் முருகன். கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ள நிலையில் அவர் பீடி சுற்றும் வேலை செய்து வருகின்றார். இந்த தம்பதிக்கு பாலகிருஷ்ணவேணி என்ற 13 வயது மகளும், மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆலங்குளம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். இவருக்கு பிறக்கும்போதே இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து மாணவி மருந்து மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு சிறுமி மாத்திரை எடுக்க தவறியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை பள்ளி சீருடை அணிந்து கொண்டு மகிழ்ச்சியோடு பள்ளிக்கு புறப்பட்ட சிறுமி வீட்டின் வாசலிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப் போன பெற்றோர் உடனே அவரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆசை ஆசையாக கிளம்பிய சிறுமி அப்படியே கீழே விழுந்தவுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…
இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…
மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…