Connect with us

VIDEOS

நீங்க மட்டும் தான் விளையாடுவீங்களா?…. நாங்களும் சறுக்கி விளையாடுவோம்….. ஆட்டுக்குட்டி செய்த அட்ராசிட்டி…. வைரல் வீடியோ…

ஒரு வீட்டின் படிக்கட்டுக்கு இடையில் போடப்பட்டிருக்கும் சறுக்கு பகுதியில் ஆட்டுக்குட்டி ஒன்று சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நிகழ்வும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.

   

ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதற்கு உதவி செய்கின்றது. கவலையை மறந்து நாம் இந்த வீடியோக்களை பார்க்கும்போது மனசு லேசாகும். பெரும்பாலும் விலங்குகள் செய்யும் சேட்டைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அவைகள் செய்யும் சேட்டைகளை பலரும் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.

முன்பெல்லாம் நாம் வீடுகளில் இரண்டு புறங்களிலும் படிக்கட்டு கட்டி நடுவில் வாகனங்களை ஏற்றி செல்வதற்காக சறுக்கு போன்ற ஒரு பகுதியை அமைத்திருப்போம். இதில் குழந்தைகள் சறுக்கி சறுக்கி விளையாடுவார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் அது போன்று கட்டுவது இல்லை. ஒரு சில வீடுகளில் மட்டுமே அதனை வைக்கிறார்கள்.

அப்படி ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் சறுக்கு போன்று அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று அழகாக சறுக்கி சறுக்கி விளையாடுகின்றது. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by its_lovely_videos_786k (@aman565222)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top