Connect with us

VIDEOS

கடலுக்கு நடுவில் கிணறு…. கலப்படமில்லாத தண்ணீர் இங்க தான் கிடைக்குதா?…. வைரலாகும் வீடியோ…

கடலுக்கு நடுவில் ஒரு கிணற்றில் உப்பில்லாத இனிப்பான நீர் கிடைக்கின்றது. இதனை மக்கள் அதிசயமாக பார்க்கிறார்கள். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கச்சிமடம் அருகே இந்த வில்லூண்டி தீர்த்தம் அமைந்துள்ளது.

   

கடல்நீர் சூழ அதிசய கிணறு ஒன்று உள்ளது. இந்த தீர்த்த கிணற்றை சுற்றி கடல் நீர் இருந்தாலும் இந்த கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் மட்டும் உப்பில்லாமல் இனிப்பாக உள்ளது. இதன் பின்பு ராமாயணம் வரலாறு ஒலிந்துள்ளது. ராமன் ராவணனை வதம் செய்துவிட்டு சீதா தேவியை அழைத்துக்கொண்டு இலங்கையில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது சீதாதேவிக்கு தாகம் எடுத்து அவர் தண்ணீர் கேட்டார் .

அப்போது கடல் நீர் உப்பாக இருக்கும் என்பதால் ராமபிரான் கங்காதேவியை வேண்டி கடலை நோக்கி அம்பாய் எய்தினான். உடனே அந்த இடத்தில் கங்கை நீர் வரத் தொடங்கியது. கங்கை நீரை சீதாதேவி அருந்திய பிறகு ஏழை மக்களுக்கு பயன்படட்டும் என்று அதனை அங்கே இருக்கும் படி வேண்டினார். அதிலிருந்து அன்று முதல் இன்று வரை அங்கு உப்பு நீர் இல்லாமல் நன்னீர் கிடைக்கின்றது. இதனை மக்கள் புண்ணிய கிணறு என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Ⓜanu sunny (@sunnychan_ms)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top