Connect with us

VIDEOS

ஓடியாங்க…! ஓடியாங்க…! விமானம் வந்திருக்கு எல்லாரும் ஓடியாங்க…. சாலையில் இருந்த விமானம்…. காண குவிந்த பொதுமக்கள்..

நடுரோட்டில் நின்று கொண்டிருந்த விமானத்தை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. விமானம் என்பது அனைவருக்கும் பிடிக்கும். நடுத்தரப்பட்ட மக்கள் அனைவரும் எப்படியாவது ஒரு முறையாவது நாம் விமானத்தில் சென்று வர வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. பெரும்பாலும் மக்கள் வானத்தில் பறக்கும் விமானங்களை பார்த்திருப்பார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் விமானத்தை அருகில் சென்று பார்த்தது கிடையாது.

   

அப்படி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழுதாகி நின்ற விமானத்தை லாரியில் ஏற்றி ஹைதராபாத் கொண்டு சென்றனர். இரவில் மட்டுமே இந்த லாரி இயங்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் லாரி சென்ற போது ஏராளமான மக்கள் திரண்டு சென்று பார்த்தனர். மேலும் லாரி அருகே சென்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் .

இந்த விமானத்தை ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரெஸ்டாரன்ட் போல மாற்றுவதற்கு வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்த விமானத்தை எடுத்துச் செல்லும்போது பொதுமக்கள் அதன் அருகே சென்று போட்டோ எடுப்பதும், செல்ஃபி எடுப்பதும் வீடியோ எடுப்பதுமாக சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் கூட்டம் குவிந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து மக்களை செல்லும்படி தெரிவித்தனர்.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top