Connect with us

VIDEOS

என்னடா இது…! கேக்க வெட்டவே முடியல…. அது கேக்கே இல்லடா….. பர்த்டே பாயை பிராங்க் செய்த நண்பர்கள்…. வைரலாகும் வீடியோ…

தன் நண்பனுக்கு பிறந்தநாள் என்று அழகாக கேக் வாங்கிக் கொண்டு வந்து அவரை பிராங்க் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் பகிரப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வருகிறார்கள். அவர்கள் youtube, twitter, instagram போன்ற பக்கங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறார்கள்.

   

இணையங்களில் பெரும்பாலும் தற்போதெல்லாம் பிராங்க் செய்யும் வீடியோ தான் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் பிராங்க் செய்பவரை கஷ்டப் படுத்தாமல் இருக்கும். ஆனால் ஒரு சிலர்கள் எல்லை மீறி அவர்களை துன்புறுத்தும் வகையில் பிராங்க் செய்கிறார்கள். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று பலரும் கேட்டுக் கொண்டாலும் அவ்வாறு தான் செய்கிறார்கள்.

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் இரண்டு நபர்கள் தனது நண்பனின் பிறந்த நாளுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு கேக்கை ரெடி செய்து கொண்டு வருகிறார்கள். அவரும் அதை பார்த்து ஆனந்தம் அடைகிறார். பின்னர் அந்த கேக்கை வெட்ட முயற்சி செய்கிறார். ஆனால் அந்த கேக்கை எவ்வளவு முயற்சித்தும் வெட்ட முடியவில்லை.

நண்பர்களுக்கும் முயற்சி செய் என்று கூற பின்னர் அந்த நபர் அந்த கேக்கை தடவி தடவி பார்க்கிறார். ஸ்ட்ராங்காக உள்ளது. பின்னர் அதை எடுத்துப் பார்த்தால் அது ஒரு பாத்திரம். அந்த பாத்திரத்தின் மேல் கேக் கிரீமை வைத்து அழகாக டெகரேட் செய்து கொண்டு வந்து பிறந்தநாள் நண்பனை பிராங்க் செய்துள்ளார்கள். இந்த வீடியோ மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இதை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by BTech Badithulu (@btechbadithulu)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top