“பயங்கரம்”… அரிவாளுடன் துரத்திய கும்பல், நடுரோட்டில் அலறிய டெலிவரி ஊழியர்… சென்னையை அதிரவைத்த சம்பவம்….!

Spread the love

சென்னை வேளச்சேரி லட்சுமி நகரைச் சேர்ந்த பார்த்திபன் (23) என்பவர் செப்டோ (Zepto) நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் வேளச்சேரி ஜே.என். நகர் குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்துள்ளனர். திடீரென தங்களது கையில் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் பார்த்திபனை கீழே தள்ளி, கை, கால் மற்றும் நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்த பார்த்திபன், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.

குடியிருப்புப் பகுதியில் அரங்கேறிய இந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக ஒன்றுதிரண்டு கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியடித்தனர். பொதுமக்களின் துணிச்சலான செயலால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த பார்த்திபனை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து டெலிவரி ஊழியரை அரிவாளால் வெட்டிய இச்சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களைக் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

12 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

20 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

43 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

52 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

57 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

58 minutes ago