‘கலாப காதலன்’ படத்தில் வந்த ஆர்யாவின் மச்சினிச்சியை நியாபகம் இருக்கா..? இந்த பிரபல ஜீ தமிழ் சீரியல்ல நடிக்கிறாரா..?

By Mahalakshmi

Published on:

2006 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “கலாபக் காதலன்”; இத்திரைப்படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சியாக நடிகை அக்ஷயா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார் நடிகை அக்ஷயா  தற்போது  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சந்தியா ராகம்” என்ற தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

   

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும், தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களம் இறக்கியும்  வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் சந்தியா ராகம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஜானகி மற்றும் சந்தியா என இரண்டு சகோதரிகளின் பாச கதையாக இந்த சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்  நடிகை அக்ஷயா. இவர் ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரை சின்னத்திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அது கலாபக் காதலன் கண்மணி தான் என்று ரசிகர்கள் அடேங்கப்பா அந்த நடிகையா இது என ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஹீரோயினியை மிஞ்சும் அளவுக்கு அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கருத்தை தெரிவிக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi