இந்தியாவின் டாப் 7 கோவில்கள்.. மலைக்க வைக்கும் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில்..

By John

Updated on:

கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நமது பாரதம் விளங்கி வருகிறது. சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இணையான பலத்தையும் பெற்று வல்லரசு நாடாகத் திகழ்கிறது. எந்த அளவிற்கு மக்கள் தொகை உள்ளதோ அதே அளவிற்கு பல்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. பல வகைப்பட்ட சமய வழிபாடு கொண்டதாக விளங்கினாலும் இந்து மதத்தை பிரதானமாகப் பின்பற்றி வருகின்றனர்.

சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலும் இந்தியாவின் பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில் அதிக வருமானம் தரும் இந்துக் கோவில்களில் முதல் 7 இடங்களைப் பெறும் கோவில்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதனை வரிசையாகப் பார்ப்போம்.

   

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இந்தப் பட்டியலில் 7-வது இடம் பெற்றதும் தமிழ்நாட்டின் ஒரே கோவிலுமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் பல்வேறு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் தினசரி வந்து கோவிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியப்படைகின்றனர். இக்கோவிலின் ஆண்டு வருமானம் ரூ. 6 கோடியாக உள்ளது. மேலும் கோவிலுக்குச் சொந்தமாக கோடிக்கணக்கில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

Madurai
madurai

ஷீரடி சாய்பாபா கோவில்

அடுத்ததாக 6-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் சாய்பாபா அமர்ந்திருக்கும் சிம்மாசனம் மட்டும் 94 கிலோ தங்கத்தால் ஆனது. மேலும் இக்கோவிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.400 கோடியாக உள்ளது.

Sai baba
saibaba

அமிர்தசரஸ் பொற்கோவில்

சீக்கியர்களின் புனிதக் கோவிலான பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவில் 5-ம் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலின் தங்க மேற்கூரை 400கிலோ தங்கத்தால் ஆனது. ஆண்டு வருமானம் 500 கோடியாக உள்ளது.

Amristar
amristarr

குருவாயூரப்பன் கோவில்

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவில் 4-ம் இடம் பெற்றுள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் வைப்புத் தொகை 1737 கோடி ரூபாயா உள்ளது. மேலும் 271.05 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

Guruvayur
guruvayurkrishna 1680527452

வைஷ்ணோ தேவி கோவில்

முஸ்லீம்கள் அதிகமாக உள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி கோவில் 3-ம் இடம் பெற்றுள்ளது. 1800 கிலோ அளவில் தங்கமும், 2000 கோடி ரொக்கமும் கொண்டு விளங்குகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும்  கோவிலாகவும் விளங்குகிறது.

Vaishnav
Jammu Vaishno Devi tour package

பத்மநாபசுவாமி கோவில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் 2-ம் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 1.20 இலட்சம் கோடி சொத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் விலை மதிக்க முடியாத அளவிற்கு தங்கம், வைர ஆபரணங்கள் புதையலாகவும் உள்ளது.

padmanaba swami
padmanaba

திருப்பதி ஏழுமலையான் கோவில்

நாட்டின் நம்பர் 1 பணக்காரக் கோவிலாக ஆந்திரமாநிலம் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. 3 இலட்சம் கோடி சொத்து மதிப்புடனும், தினசரி கோடிக்கணக்கில் உண்டியலில் காணிக்கைகளும் பெறப்படுகிறது. 50,000-க்கும் அதிகமான பக்தர்கள் தினசரி ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.

Thirupathi
Tirupati Balaji Temple Picture 1

இன்னும் பல கோவில்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.