தனக்கு கேன்சர் இருப்பது தெரியாமலேயே இறந்து போன பவதாரணி.. கடைசி வரை உண்மையை மறைத்த ஒட்டுமொத்த குடும்பம்..

By Sumathi

Updated on:

இசைஞானி இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற 2 மகன்கள். பவதாரணி என்ற மகள் என்பது திரைத்துறையினர், ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். ஆனால் பவதாரணி அதிகமாக பப்ளிசிட்டி ஆகும் அளவுக்க அடிக்கடி தன்னை எக்ஸ்டாபிளிஷ் செய்து கொண்டது இல்லை. ஆனால் அவரது பாடல்கள் அற்புதமாக இருந்திருக்கின்றன.

   

பாரதி படத்தில் இடம்பெற்ற ‘மான் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்றவர் பவதாரணி. என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்குறே, மஸ்தானா மஸ்தானா நீதான் எனக்கு மஸ்தானா, இது சங்கீத திருநாளோ, ஒளியில தெரிவதென்ன தேவதையா என பல அற்புதமான பாடல்களை தந்த பவதாரணி, திடீரென கல்லீரல் புற்றுநோயால் இறந்து போன துயரச் சம்பவம் நேற்று மாலை இலங்கையில் நடந்தது.

Bhavatharini Ilaiyaraaja

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, பவதாரணிக்கு இப்படி ஒரு நோய் பாதிப்பு இருப்பதே சமீபத்தில்தான் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்திருக்கிறது. அவ்வப்போது வயிற்று வலி போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்ட போது அவர் அதற்கான சிகிச்சை மட்டுமே பெற்றுக்கொண்டு இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ரத்த வாந்தி எடுத்த பிறகுதான், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முழுமையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்பே, கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு அவருக்கு இருப்பதே இளையராஜா, அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் 90 சதவீதம் வரை நோய் பரவி பாதிப்பு அதிகமான நிலையில், ஹீமோதெரபி கொடுக்கும் முயற்சியும் கைவிடப்பட்டது. ஏனெனில் ஹீமோதெரபி கொடுக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. ஒல்லியான உடல்வாகுடன் மிக பலவீனமாக பவதாரணி இருந்துள்ளார்.

ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், நோய் முற்றாத நிலையில் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்து அவரை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் நோய் முற்றிய நிலையில், பெரியப்பா, சித்தப்பா, அத்தை மாமா, அண்ணன் தம்பி, அக்கா தம்பி என அனைத்து உறவுகளும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் பவதாரணியில் அருகில் இருந்து கவனித்து, அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளனர்.

இந்த சூழலில்தான் இலங்கையில் உள்ள உலகத்தர சிகிச்சை தரும் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்துள்ளார். ஆனால் கடைசி வரை அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்ததை அவருக்கு யாருமே தெரிவிக்கவில்லை. கடைசி வரை தனக்கு அப்படிப்பட்ட நோய் இருப்பதே தெரியாமல்தான் இறந்திருக்கிறார் பவதாரணி.

author avatar
Sumathi