விஜய் டிவி, சன் டிவிக்கு போட்டியாக புது ரியாலிட்டி ஷோவை களமிறக்கும் ஜீ தமிழ்.. வெளியான ப்ரோமோ..!

By Nanthini on ஆவணி 29, 2024

Spread the love

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களுக்கு இடையே எப்போதும் போட்டி நிலவுவது வழக்கம்தான். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்ட டிஆர்பி முதலிடத்தை பிடிக்க ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். இதனைத் தவிர பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

   

விஜய் டிவியில் பல வருடமாக குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்குப் போட்டியாக வந்த சன் டிவியின் டாப் குக் டூப் குக் ஷோவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு இரண்டு சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டே டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டு சேனல்களுக்கும் போட்டியாக தற்போது ஜீ தமிழ் சேனல் களமிறங்கியுள்ளது.

   

 

அதாவது ஜீ தமிழில் புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமையல் எக்ஸ்பிரஸ் என்ற ரியாலிட்டி ஷோவை ஜீ தமிழ் அறிவித்துள்ளது. அதன் ப்ரோமோவில் நடிகை சீதா உள்ளார். அவங்க வீட்டு சமையலை பார்த்திருப்பீங்க, இவங்க வீட்டு சமையலை பார்த்து இருப்பீங்க, நம்ம வீட்டு சமையலை பார்க்க ரெடியா என்று சொல்லி மற்ற இரண்டு செயல்களையும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அது தொடர்பான ப்ரோமோ வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

zeetamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@zeetamizh)