CINEMA
வெளிநாட்டில் ஹாயாக சுற்றித்திரியும் கோலிவுட்டின் 40 ப்ளஸ் ஜோடி.. வைரலாகும் புகைப்படங்கள்..!
கே. பாலசந்தர் இயக்கிய பொய் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை விமலா ராமன். தொடர்ந்து சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள விமலா ராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிரான்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் விமலா ராமன் நடிகர் வினய்யுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார். ஹனுமான் படத்தில் வில்லனாக நடித்த இவர் நடிகை விமலா ராமனை பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உன்னாலே உன்னாலே மற்றும் ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த இவர் சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது இருவரும் ஜோடியாக மியாமி பீச்சில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.