கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்திருப்பதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பல நடிகைகள் தொடர்ச்சியாக புகார் கொடுத்து வருகின்றனர் இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு நெருக்கடி அதிகரித்தது இதனால் அவர் உள்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர் விரைவில் தேர்தல் நடத்தி புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மலையாள திரையுலகம் பற்றி நடிகை ஊர்வசி பேட்டி அளித்துள்ளார். அவரது கருத்துக்கள் இப்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

ஊர்வசி கூறியதாவது, அறிக்கை வெளியானதில் இருந்து கேரளா சினிமாவில் மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடப்பதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில் கிடையாது. எல்லா துறைகளிலும் நடக்கிறது. வடமாநிலங்களிலும் நடக்கிறது. மருத்துவமனை, கல்லூரி, ஆண், பெண் என எல்லாருக்குமே இந்த மாதிரி டார்ச்சர் இருக்க தான் செய்கிறது. ஆனால் கேரளாவில் இருக்கும் பெண்கள் தான் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நடந்த அநியாயங்கள் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு பெண் நடிகை பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சொல்ல தொடங்கியதும் மற்ற நடிகைகளும் தாங்கள் பாதிக்கப்பட்டதை கூறியுள்ளனர்.

மலையாள திரை உலகில் இருக்கும் பெண்கள் தைரியமாக இருந்ததால் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மலையாள சினிமாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறது என்று சொல்ல முடியாது. மற்ற மொழி சினிமாக்களில் யாரும் சொல்ல முன்வரவில்லை என்பதுதான் உண்மை. அந்த அறிக்கையில் பேசியுள்ள சில நடிகைகள் அடிப்படை வசதி இல்லை, சம்பளம் சரியாக தருவதில்லை, சில நேரங்களில் இரவில் வீட்டு கதவை தட்டிக்கிறார்கள் என கூறியதாக தகவல் இடம் பெற்றுள்ளது. சில பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறி இருக்கின்றனர்.

அந்த புகாரை தீர விசாரித்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நீதிமன்றத்தின் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும்.நான் சினிமாவில் எத்தனை வருடம் இருக்கின்றேன். ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் வந்தது கிடையாது. நாம் நம்முடைய வாழ்வில் தைரியமாக இருக்க வேண்டும். கதை கேட்பதற்காக இயக்குனரை தனியாக சந்திக்க வேண்டும் என்றால் லாட்ஜுக்கோ ரூமுக்கோ போகக்கூடாது. பொது இடத்தில் சந்திக்கிறேன் என சொல்லுங்கள்.

அப்படி நடிகைகள் தனியாகத்தான் சந்திக்க வேண்டும் என சொன்னால் துணைக்கு யாராவது ஒரு ஆளை கூட்டிக்கொண்டு செல்லலாம். இது நடிகைகளுக்கு மட்டுமில்லாமல் எல்லா பெண்களுக்கும் பொருந்தும். பெண் ஒரு இடத்தில் தைரியமாக போராட முடியாது என்றால் அங்கு இன்னொருவரை துணைக்கு கூட்டிட்டு போவது தவறு கிடையாது. அதற்காக நான் பெண்கள் பழைய நிலையில் தான் இருக்க வேண்டும். இன்னும் ஒருவரை நம்பி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்முடைய சேஃப்டி முதலில் முக்கியம். அதை நாம் கவனிக்க வேண்டும் என ஊர்வசி பேசி உள்ளார்.

