ஒவ்வொரு கறைக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது… இந்த ஒற்றை வார்த்தையில் Surf Excel வளர்ந்தது எப்படி தெரியுமா…?

By admin on ஆவணி 29, 2024

Spread the love

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் 1993 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் வீட்டு மற்றும் தனிமனித உபயோக பொருட்கள் உணவு மற்றும் பானங்கள் போன்ற வேக நுகர்வு பொருட்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் முக்கியமான ஒரு பிராண்ட் Surf Excel ஆகும்.

   

ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த இந்த Surf Excel பொருட்களின் விற்பனை 2005 ஆம் ஆண்டு பின்னடைவை சந்தித்தது. விற்பனையில் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அப்போது பலவிதமான யுக்திகளை இந்த நிறுவனம் உருவாக்குகிறது. பல வகையான விளம்பரங்களை தயாரித்தது. இந்த Surf Excel சாக்லேட் கரையை நீக்கும், துணி துவைத்தால் நிறம் போகாது, குறைந்த நேரத்தில் துணியை துவைக்கலாம் ,10% கூடுதல் தள்ளுபடி என பல வகையில் விளம்பரப்படுத்தியும் எந்த பயனும் இல்லாமல் Surf Excel பிராண்டில் பெரிய மாற்றமோ வளர்ச்சியோ இல்லாமல் இருந்தது.

   

அப்போது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டின் குழந்தை வளர்ப்பு பற்றி தெரிய வருகிறது. அது என்னவென்றால், பொதுவாக இந்தியாவில் உள்ள அம்மாக்களுக்கு குழந்தைகளின் ஆடையில் கறை இருந்தால் பிடிக்காது. திட்டுவார்கள் அடிப்பார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் குழந்தைகளின் ஆடைகளில் கறை இருந்தால் மட்டுமே அவர்கள் ஏதோ கற்றுக் கொள்கிறார்கள் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

 

இந்திய அம்மாக்களுக்கு என்னதான் கறை பிடிக்காது என்றாலும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுதல் பிடிக்கும் என்பதை அடிப்படையாக உணர்ந்த இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் இந்த ஐடியாவை வைத்து விளம்பரங்களை உருவாக்க திட்டமிட்டது. என்ன கற்றுக் கொண்டார்கள் என்பது அம்மாவுக்கு எப்படி தெரியும்? வெளியே சென்று விட்டு உள்ளே வரும் குழந்தை ஒரு கறையோடு வருகிறது என்றால் அதற்குப் பின்னால் அந்த குழந்தை இப்படி செய்தேன் அப்படி செய்தேன் என்று ஏதாவது கூறும். இப்படி உருவானது தான் ஒவ்வொரு கறைக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது என்பது என்ற விளம்பரம் ஆகும்.

ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது என்ற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான லிண்டாஸ் நிறுவனம் இந்த விளம்பரத்தை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு வடிவமைத்து கொடுத்தது. பொதுவாக வீட்டில் குழந்தைகள் செய்யும் சேட்டைகளின் மூலம் கறை நல்லது என்ற விளம்பரங்களை உருவாக்கினார்கள்.

இந்த விளம்பரத்திற்கு பிறகு Surf Excel விற்பனையில் பெரிய முன்னேற்றம் இருந்தது மட்டுமல்லாமல் அசுர வேகத்தில் உயர்ந்தது. Surf Excel பவுடர் மட்டும் இல்லாமல் லிக்யூடு, வாஷிங்மெஷினுக்கான லிக்யூட் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. 2000 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மிகச் சிறந்த விளம்பரமாக இந்த கறை நல்லது விளம்பரத்தை எக்கனாமிக் டைம்ஸ் தேர்ந்தெடுத்து கூறியது.

சமீபத்திய நிலவரப்படி Surf Excel பிராண்டின் வருமானம் 5000 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது. இந்துஸ்தான் யுனிவர் லிமிடெட் நிறுவனத்தின் வருமானத்தில் 14% இந்த சர்பெக்சல் பிராண்ட் மூலமாகவே கிடைக்கிறது. தனித்துவமான ஐடியாக்கள் சிந்தனைகள் அதை செயல்படுத்தும் திறன் இருந்தால் எப்படிப்பட்ட தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் CEO சஞ்சீவ்.