இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரை உலகினர் அனைவரும் பெருந்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தனது அக்காவான பாடகி பவதாரணியின் உடலை காண வாடிய இளையராஜா முகத்துடன் இலங்கைக்கு வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணி அளவில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இளையராஜா இலங்கைக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் தனது அன்பு மகளான பவதாரணி இறப்பு செய்தி அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. மேலும் அவரின் உடலை காண உடனே வைத்தியசாலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் பாடகி மற்றும் தனது அக்காவின் மறைந்த செய்தி கேட்டு அவரின் உடலை நேரில் காண வாடிய முகத்துடன் யுவன் சங்கர் ராஜா இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிய முகத்துடன் அக்கா பவதாரணியின் உடலை காண சென்ற யுவன்! #yuvan #yuvanshankarraja #RIPBavatharani #Ilaiyaraja #bavatharani #singerbavatharani #ilayarajadaughter #Lankasri #Tamilwin #Lankasrifm #Manithan pic.twitter.com/l97GE3hWsw
— Rj vinodhini (@vinodhini20211) January 26, 2024
