இறப்பதற்கு முன்பு பிரபல நட்சத்திர ஹோட்டலில் பவதாரணிக்காக குடும்பம் செய்த செயல்.. இணையத்தில் வெளியான தகவல்..

By Archana

Updated on:

பாடகி பவதாரணி புற்றுநோயால் மரணமடைந்த நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே உயிரிழந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி. பொதுவாக பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் முதல் ஹீரோ. அப்படி தான் பவதாரணிக்கும்.

w1

சிறு வயது முதலே தந்தையின் செல்லக் குழந்தையாக வளர்ந்து வந்தவர், தந்தையைப் போலவே இசையுலகில் மிளிரவும் செய்தார். ஒரு பாடகியாக இசையமைப்பாளராகவும் வலம் வந்த பவதாரணி, திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகினார். பிறகு மீண்டும் பாடல்களை பாடத் தொடங்கினார். இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் பவதாரணி. உடல் மெலிந்து காணப்பட்ட அவர், உற்றார் உறவினர்களிடமோ தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தான் கூறி வந்ததாகவும் புற்றுநோய் என்பதை தெரியப்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

   
DVb7yd VMAA0dzv 1

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அனைவருக்கும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரை அனைவரும் அன்புடனும், அரவணைப்புடனும் பார்த்து வந்துள்ளனர். உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அவர் பவதா தான். சில தினங்களுக்கு முன்பு கூட, சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் அனைவரும் ஒன்று கூடி அவரை மகிழ்விக்க, பல பாடல்களை பாடிக்காட்டியும், நகைச்சுவைகள் செய்தும் உற்சாகப்படுத்தியுள்ளனர். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றவர், சிகிச்சை பெறும் முன்னரே உயிரிழந்து இருக்கிறார். இந்த நிகழ்வு, அவரது உற்றார், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1
author avatar
Archana