இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் காலமான நிகழ்வு தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு சிலரின் குரலை நம்மால் மறக்க முடியாது. இந்தப் பாடலை இவர் தான் பாடியுள்ளார் என்றுக் கூட தெரியாமல் அந்தப் பாடல்களை நாம் ரசித்திருப்போம். அப்படியான ஒரு குரல் பவதாரணியின் குரல். அவரது குரலில் சினிமாவில் ஜொலித்த பாடல்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்..
1. மாநாடு :
வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் உருவான மாநாடு படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தில் இடம் பெற்ற ”மெஹருசைலா” பாடலில், பெண் பாடக் கூடிய வரிகளுக்கு குரல் கொடுத்திருந்தார் பவதாரணி..
2. அனேகன் :
2015-ம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனேகன். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் குறிப்பாக காதல் மெலோடி பாடலாக அமைந்த ”ஆத்தாடி ஆத்தாடி” என்ற பாடலை பவதாரணி பாடியிருந்தார்.
3. மங்காத்தா :
2011-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், திரிஷா, ஆண்ட்ரியா, அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த ”என் பாதி நீ “ என்ற பாடலை பாடியிருந்தார் பவதாரணி.
4. தாமிரபரணி :
2007-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால், பானு உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தாமிரபரணி. இப்படத்தில் காதலர்களுக்கு ஃபேவரைட் பாடலாக அமைந்திருந்த ”தாலிய தேவையில்லை” என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார் பவதாரணி..
5. ஃபிரண்ட்ஸ் :
2001-ம் ஆண்டு விஜய், தேவையாணி, சூர்யா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபிரண்ட்ஸ். இப்படத்தில் தேவையானியும், விஜய்யும் ஆடும் டூயட் பாடலான ”தென்றல் வரும்” என்ற பாடலை பாடியிருந்தார் பவதாரணி..
6. தீனா :
அதே 2001-ம் ஆண்டு அஜித், லைலா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் தீனா. இப்படத்தில் அஜித் மற்றும் லைலா இருவருக்கும் உள்ள டூயட் பாடலான ”நீ இல்லை என்றால் “ பாடலை பாடியிருந்தார் பவதாரணி..
7. காதலுக்கு மரியாதை :
1997-ம் ஆண்டு விஜய், ஷாலினி நடிப்பில் வெளியானி பட்டையை கிளப்பிய திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் காதலிக்கும் இளைஞர்கள் மத்தியில் என்னென்றும் ஃபேவரைட் தான். அப்படியான ஒரு பாடலான ”இது சங்கீத திருநாளாம் “ பாடலை பாடியவர் பவதாரணி..
8. அழகி :
2002-ம் ஆண்டு பார்த்திபன் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் அழகி. இப்படத்தில் ”ஒளியிலே தெரிவது தேவதையா” என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. இப்பாடலில் பெண் பாடக் கூடிய வரிகளுக்கு குரல் கொடுத்தவர் பவதாரணி.. இதேப்படத்தில் பள்ளிக் கூட மாணவர்களுக்கு இடையே நடக்கும் குறும்புகளை வெளிப்படுத்தும் பாடலான ”டமக்கு டமக்கு டம் “ பாடலையும் பவதாரணி பாடியிருந்தார்.
9. பாரதி :
2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாரதி. இப்படத்தில் ”மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஃபேமஸ். அந்தப் பாடலை பாடி சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தவர் பவதாரணி.