பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீசான அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்ப காலகட்டத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த பாடல்கள் பெரியளவு வரவேற்பை வரவில்லை.
கடந்த 1999-ஆம் ஆண்டு சூர்யா ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கத்தில் ரிலீசான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களுக்கும் படத்தில் இடம்பெறும் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்தது.
கடந்த 2007-ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் அடித்தனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பருத்திவீரன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நிறுவனம் தயாரித்தது.
5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பருத்திவீரன் திரைப்படம் 65 கோடி ரூபாய் வரை வசூல் செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இன்றும் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் பருத்திவீரன் படம் தான் பெரிதும் பேசப்படுகிறது. பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தியேட்டருக்கு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுதாராம். இந்த தகவலை அவருடன் இணைந்து படம் பார்த்த இயக்குனர் அமீர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.