நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஸ்ரீவித்யா… பிறகு அதே வீட்டில் அவருக்கு நடந்த துயரம்.. இதுவரை பலரும் அறியாத சோக கதை..!

By Nanthini on புரட்டாதி 29, 2024

Spread the love

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீவித்யா  திருவருட்செல்வர் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாள மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கே பாலசந்தர் இயக்கிய 100க்கு 100 திரைப்படம் திரைப்படத்தின் மூலம் மேஜர் ரோல் செய்ய ஆரம்பித்தார். அதில் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருந்தது காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கின. அதன் பிறகு அன்னை வேளாங்கண்ணி, டெல்லி டு மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். கமல்ஹாசன் உடன் இணைந்து அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த போது இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இரு குடும்பத்தாரும் விரும்பினார்கள்.

   

அதுமட்டுமல்லாமல் கமலும் ஸ்ரீவித்யாவும் காதலித்தனர். ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீதிவ்யா வீட்டிலேயே முடங்கி கிடந்தார். ஒரு கட்டத்தில் ஸ்ரீவித்யா ஹீரோயின் வாய்ப்புகளை இழந்து அம்மா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் அதிகம் குணசத்திர வேதங்களிலும் நடித்தார். இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவுக்கு ஆறுதலாக ஜார்ஜ் என்பவர் வாழ்க்கையில் நுழைந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு காதல் என்ற வார்த்தையை கூறி அவரை மயக்கி அனைவருடைய எதிர்ப்பையும் மீறி ஸ்ரீவித்யா அவரை திருமணம் செய்து கொண்டார்.

   

 

முதலில் அவரைப் பற்றி சரியாக ஸ்ரீவித்யாவுக்கு தெரியவில்லை. அதன் பிறகு அவருடைய குணம் பற்றி ஸ்ரீவித்யாவுக்கு தெரிய வர ஒரு கட்டத்தில் என்னுடைய வீட்டை எனக்கு கொடுத்து விடு என்று அவரிடம் ஸ்ரீவித்யா கேட்டார். ஆனால் அதையெல்லாம் தர முடியாது என்று வீட்டை விட்டு ஸ்ரீவித்யாவை ஜார்ஜ் வெளியே தள்ளியுள்ளார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீவித்யா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போது ஒரு மிகப்பெரிய வீடு தேவைப்பட்டது. அதற்காக தயாரிப்பாளர் ஒரு பிரம்மாண்ட வீட்டை ஏற்பாடு செய்து விட்டு ஷூட்டிங் நடைபெறும் இடத்தை ஸ்ரீவித்யாவிடம் கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து ஸ்ரீவித்யாவின் மேக்கப் மேன் போன் செய்து ஸ்ரீ வித்யா நாளைக்கு ஷூட்டிங் வரமாட்டாங்க என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் அவரிடம் பேசி பிறகு அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு அங்கு ஸ்ரீ வித்யா அமர்ந்து கொண்டிருப்பதை கண்டு இயக்குனர் உள்ளிட்ட பலரும் தயாரிப்பாளரை கடுமையாக திட்டி உள்ளனர். பிறகு குழம்பிப்போன தயாரிப்பாளர் ஸ்ரீ வித்யாவிடம் சென்று இங்கு என்னதான் நடக்கிறது ஏன் எல்லோரும் என்னை திட்டுறாங்க என்று கேட்டுள்ளார். அப்போது இதுதான் என் வீடு என்று ஸ்ரீ வித்யா கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவர் கலங்கி போனார். அதுமட்டுமல்லாமல் படபிடிப்பு நடைபெறும் போது ஜார்ஜ் மேலிருந்து சிகரெட் பிடித்தபடி அங்கு நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு துயரமான சம்பவம் ஸ்ரீவித்யா வாழ்க்கையில் நடந்துள்ளது.