பிரபல முன்னணி பாடகியாக திகழ்ந்த சுஜித்ரா இதுவரை ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை முதலில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு பாதியிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சில வருடங்களுக்கு முன்பு கோலிவுட்டையே பரபரப்பாகிய சம்பவம் என்றால் அது சுச்சி லீக்ஸ். அதில் திரை உலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகிறது. அந்த சமயத்தில் சுஜித்ரா மனநலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் சமீப காலமாக சுசித்ரா மீண்டும் பேட்டிகளை சரளமாக கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், கடந்த எட்டு ஆண்டுகளாக எனக்கு நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகள் வடிந்து இப்போதுதான் நன்றாக இருக்கிறேன். எனக்கு பத்திரிக்கை துறையில் பணியாற்ற ஆசை என்பதால் தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளேன். தமிழ் எனக்கு எழுதப் படிக்க தெரியாது பேச மட்டுமே தெரியும். என் வாழ்க்கையில் மேம்பட்டு ரொம்ப நல்ல இடத்தில் இருக்கிறது. சுச்சி லீக்ஸ் பிரச்சனை தான் என் வாழ்க்கையை கெடுத்தது. அந்த விஷயத்தை நான் தான் செய்தேன் என்றே இன்று வரை அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை நான் செய்யவில்லை. கார்த்திக் குமார் என்னை பைத்தியம் போல உருவகப்படுத்தி விட்டார்.
எனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் பொய் சொல்ல வேண்டியதாக இருந்தது. அவரை திருமணம் செய்வதாக இருந்தது. அதனால் அவருடைய சம்மதத்துடன் பொதுவெளியில் கணவர் என்று சொன்னேன். அப்போது அவருடைய குணம் எனக்கு தெரியவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உடல் ரீதியாக துன்புறுத்துவது தெரிய வந்தது. இதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சென்னையில் உள்ளார். நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். இப்போது இருவருக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மீண்டும் சினிமா துறையில் பார்க்க முடியாது. பழைய சுசித்ராவை யாராலயும் கொண்டு வர முடியாது என்று பேசியுள்ளார்.