தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும். அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார். இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இப்படி பிசியாக இருந்தால் கௌதம் மேனன் இடையில் சில பிரச்சனைகள் வந்ததால் இயக்கத்தில் இருந்து ஒதுங்கினார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர் சிம்புவை வைத்து இயக்கியிருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கௌதம் மேனன் மீண்டும் தற்போது மம்மூட்டியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை மம்முட்டி தயாரிக்கும் நிலையில் கேரளாவிற்கு வந்து செல்லும்போது எந்த ஒரு வேலையாட்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டாம் நீங்கள் மட்டும் வந்து சென்றால் போதும் மற்ற அனைத்து வேலையாட்களும் இங்கே இருக்கிறார்கள் என்று கௌதம் மேனன் இடம் மம்முட்டி கூறியுள்ளார்.

இதனால் கௌதம் மேனன் மட்டும் படப்பிடிப்பின் போது அங்கு வந்து செல்கிறார். இந்த நிலையில் கௌதம் மேனனுக்கு இங்கு ஒரு விளம்பர பட வாய்ப்பு வந்த நிலையில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் அதனை தவற விடக்கூடாது என்பதற்காக மாலை 6 மணி வரை மலையாள பட சூட்டிங் எடுத்துவிட்டு அதன் பிறகு அங்கிருந்து விமான மூலமாக சென்னைக்கு வந்து விடிய விடிய சூட்டிங் எடுத்து முடித்துவிட்டு பிறகு மீண்டும் மலையாள படப்பிடிப்புக்கு விமானத்தில் சென்று உள்ளார். இப்படியே மூன்று நாட்கள் உறக்கம் இல்லாமல் இங்கும் அங்கும் ஆக மாறி மாறி கௌதம் மேனன் வேலை செய்துள்ளார். சினிமாவில் ஒதுங்கி இருந்த கௌதம் மேனன் தற்போது ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பதால் அவருடைய படங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
