வெங்கட் பிரபு என்கிட்ட வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணனும்னு சொன்னப்ப.. இறந்த தனது அக்கா குறித்து உருக்கமாக பதிவிட்ட யுவன்..!

By Mahalakshmi on ஜூன் 22, 2024

Spread the love

GOAT திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது அக்கா பவதாரணியின் குரலை பதிவிட்டுள்ளது குறித்து மிக உருக்கமாக பேசியிருக்கின்றார் யுவன் சங்கர் ராஜா.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளர்ந்தவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்திருக்கின்றார். மேலும் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், யோகி பாபு, சினேகா லைலா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

   

   

கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் ரசிகர்களுடைய அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இது திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடி இருக்கின்றார். முதல் பாடல் விசில் போடு இரண்டாவது பாடல் இன்று வெளியான சின்ன சின்ன கண்கள். நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் தினமான இன்று இந்த பாடலை பட குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள் .

 

இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கும் நிலையில் அவருடன் சேர்ந்து மறைந்த பிரபல பாடகியான பவதாரணி குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கொண்டு வந்திருக்கின்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பவதாரணியின் குரலை இப்பாடலில் பயன்படுத்தியது குறித்து சில பதிவுகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கின்றார் யுவன்.

அதில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது சிங்கள் எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த உணர்வை விரிவிப்பதற்கு வார்த்தை கிடையாது. பெங்களூருவில் இந்த பாடலை நாங்கள் இசையமைத்த போது நானும் வெங்கட் பிரபுவும் இந்த பாடல் என் சகோதரி ஆனது என்பதை உணர்ந்தோம். அந்த நேரத்தில் அவள் குணமாகிவிட்டால், அவளுடைய குரலை பதிவை செய்யலாம் என்று நினைத்திருந்தேன்.

#image_title

#image_title

ஆனால் ஒரு மணி நேரம் கழித்து அவரின் மரணச் செய்தி எனக்கு வந்தது. அவருடைய குரலை இப்படி நான் பயன்படுத்துவேன் என்று ஒருநாளும் நினைத்து பார்க்கவில்லை. எனது இசை குழுவினருக்கும், இந்த செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிக கசப்பான தருணம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த உருக்கமான பதிவு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.