Connect with us

கால் சென்டரில் 8000 சம்பளம் தொடங்கி 28,000 கோடி சொத்துக்கு அதிபதி.. இந்தியாவின் இளம் பில்லியனர்.. யார் இந்த நிகில் காமத்..?

HISTORY

கால் சென்டரில் 8000 சம்பளம் தொடங்கி 28,000 கோடி சொத்துக்கு அதிபதி.. இந்தியாவின் இளம் பில்லியனர்.. யார் இந்த நிகில் காமத்..?

மாதம் 8000 சம்பளத்தில் கால் சென்டரில் வேலை செய்யத் தொடங்கி தற்போது இந்தியாவின் இளம் பிஸ்னஸ் மேனாக மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர்தான் நிகில் காமத்.அவரைப் பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பள்ளி படிப்பை பாதியிலேயே முடித்த இவர் தனது 17 வயதில் வேலைக்கு சேர்ந்தார். முதன்முதலாக 8000 சம்பளத்துக்கு கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்த நிகில் காமத். பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்று முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் ஆரம்பித்த ஜீரோதா என்ற நிறுவனம் மிகப்பெரிய பங்கு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

   

இவரின் தந்தை ஒரு வங்கியில் பணி புரிந்தவர். அடிக்கடி இடம் மாற்றவும் காரணத்தினால் வேறு வேறு ஊர்களில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்கள் கடைசியாக பெங்களூருவில் குடியேறினார். அப்போது அவருக்கு வயது 9 .தொடர்ச்சியான இடமாற்றங்களால் பள்ளி படிப்பை வெறுத்த இவர் கல்வி மீதான ஆர்வத்தை இழந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார்.

 

பின்னர் பழைய ஃபோன்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தபோது அவரது அம்மாவுக்கு தெரிய வந்தது. இதனால் கடுமையாக திட்டி மீண்டும் படிப்பதற்கு அறிவுறுத்தினார்கள். பத்தாம் வகுப்பு கூட முடிக்காமல் பள்ளி படிப்பிலிருந்து வெளியேறினார். பின்னர் அவரைக் குறித்து அவரின் பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்கள். பின்னர் நிகழ்காமல் 8000 சம்பளத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு வயது 17 .

பின்னர் 18 வயதில் வர்த்தகம் செய்ய தொடங்கினார். அவரை நம்பி அவரது அப்பா தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்தார். அதனை வெற்றிகரமாக செய்த இவர் அதன் பிறகு தனது சகோதரருடன் இணைந்து ஜீரோதா என்ற நிறுவனத்தை தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனம் உடனடியாக வளர்ச்சி அடையவில்லை. அதற்காக மிகக் கடுமையாக உழைத்தார்.

ஒருநாள் என் வேலைக்கு நல்ல பயன் கிடைக்கும் என்று நம்பி தனக்குத்தானே அறிவுரை கூறிக்கொண்டு ஐந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூட கூறியிருப்பார். ஐந்து ஆண்டுகள் கழித்து நல்ல பலன் கிடைத்தது, முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தன்னுடைய குருட்டு தனமான நம்பிக்கையால் இந்த வெற்றியை அடைந்திருக்கின்றார் நிகில் காமத்.

இந்தப் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய பங்குதாரரின் நிறுவனமாக உருமாறியது. படிப்படியாக வளர்ந்து தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.  இந்தியாவில் 100 பணக்காரப் பட்டியலில் நிகில் காமத் பெயர் இடம் பெற்றது. சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு வெளியேறி 8000 சம்பளத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய இவரின் சொத்து மதிப்பு தற்போது கிட்டத்தட்ட 28 கோடியில் இருந்து 30 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் கூறியிருந்ததாவது “நான் பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு தேர்வை கூட என்னை பள்ளி நிர்வாகம் எழுத விடவில்லை. இதனால் கால் சென்டருக்கு வேலை சேர்ந்தேன். மாலை 4 மணி முதல் இரவு ஒரு மணி வரை கால் சென்டரில் பணியாற்றுவேன்.

பகல் நேரத்தில் டிரேடிங் செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டேன். நீங்கள் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறினால் உறவினர்கள் உங்களை மிக மோசமாக ஜட்ஜ் செய்வார்கள். அதையெல்லாம் பற்றி கவலை பட கூடாது. எனது தந்தை எனக்கு மிக சப்போர்ட்டிவாக இருந்தால் அவர் என்னை நம்பி அவருடைய சேமிப்பு பணத்தை கொடுத்தார். அந்த நம்பிக்கையை நான் மற்றும் எனது அண்ணன் காப்பாற்றி விட்டோம்” என்று கூறியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top