அக்கா ரூட்டு க்ளியர் ஆயிடுச்சு.. அடுத்து நம்ம தான்.. அர்ஜுன் மகள் அஞ்சனாவுடன் இருப்பது அவரது காதலரா..?

By admin on ஆனி 22, 2024

Spread the love

பிரபல நடிகரான அர்ஜுன் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் அர்ஜுன். அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்ட திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

   

மூத்த மகள் ஐஸ்வர்யா விஷாலுடன் பட்டத்து யானை திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கு படத்திலும் நடித்தார். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஐஸ்வர்யாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம்.

   

 

ஆனால் அவரது தங்கை அஞ்சனாவுக்கு பிசினஸ் மீது ஆர்வம். இவர் நடிப்பு பக்கம் செல்லவில்லை. மாறாக சுய தொழில் செய்வதில் அஞ்சனா தனது கவனத்தை செலுத்தினார். 28 வயதான அஞ்சனா சர்ஜா வேர்ல்ட் என்ற பிராண்டை தொடங்கினார். இது ஒரு ஹேண்ட் பேக் பிராண்ட் ஆகும்.

இந்த நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக சுய தொழிலில் முன்னேறி வருகிறார் அஞ்சனா. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா இன்ஸ்டாகிராமில் தனது விதவிதமான போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

தனது அக்காவின் திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அஞ்சனா தனது குடும்பத்துடன் பங்கேற்றார். அதில் அஞ்சனா ஒருவருடன் வளர்ப்பு நாய்களை கையில் பிடித்துக் கொண்டு நடந்து வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அஞ்சனாவின் காதலரா இவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.