பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. மாயாவும் அவரது அல்லக்கைகளும் லூட்டி அடிப்பது எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதனை 24 மணி நேரமும் லைவாக பார்க்கும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவர்களை கிழித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த யுகேந்திரன் மாயா மற்றும் பூர்ணிமாவின் நடவடிக்கைகளை புட்டு புட்டு வைத்துள்ளார். மாயா பேசுவதை பார்த்தால் ஒரு பெண் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச முடியுமா என்ற அளவுக்கு இருக்குமாம்.
இதேபோல ஆம்பளைங்களே கூச்சப்பட்டு ஓடும் அளவுக்கு காது கூச வைக்கும் வார்த்தைகளையும் மாயா அசால்ட் ஆக பேசுவாராம். சுருக்கமாக கூறினால் மாயா கலீஜ், பஜாரி என்று யுகேந்திரன் உண்மையை போட்டு உடைத்தார். மாயாவின் ஜெராக்ஸ் போல இருக்கும் பூர்ணிமா மோசமான கமெண்ட் கொடுப்பது, கீழ்த்தரமாக ஜோக் அடிப்பது என எல்லை மீறி நடந்து கொள்வாராம்.
ஒருவேளை நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பிரதீப்பை காப்பாற்றி இருப்பேன் அவர்களது பொறாமை காரணமாக பிரதீப்பின் முதுகில் குத்திவிட்டனர். துரதிஷ்டவசமாக அவர் பலியாகிவிட்டார் என யுகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும் கமல் சார் மாயா செய்யும் தவறுகளை ஏன் தட்டிக் கேட்கவில்லை? ஒரு முறையாவது பிரதீப் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் என ஆதங்கத்துடன் யுகேந்திரன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…