வித்யாசாகரை திட்டி தான் அந்த பாடலை எழுதினேன்… பாடலாசிரியர் யுகபாரதி சொன்ன சீக்ரெட்..

By Archana

Published on:

90ஸ் காலகட்டத்தில் இசையமைப்பாளர்களாக இருந்த பலரில் ஒரு சிலர் மட்டும் தான் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இருப்பர். அப்படி காதல் பாடல்களின் மன்னனாக இருந்தவர் இசைமையாளர் வித்யாசாகர். கிராமோபோன்கள், ரெக்கார்டுகளின் ஆதிக்கத்தை வென்ற டேப் ரெக்கார்டர்கள், டிடிகே கேசட்டுகளின் ஆட்சி முடிவுக்கு வந்து, சிடி பிளேயர்களும், சிடிக்களும் பட்டித்தொட்டியெங்கும் பரவிக்கொண்டிருந்த காலக்கட்டம். களத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இந்நேரத்தில் எந்தவித சலனமுமின்றி ஒரு இசையமைப்பாளர் தனது மேம்பட்ட இசை திறனால் தமிழ் திரையுலகின் ‘மெலடி கிங்’ ஆக உருவெடுத்தார் வித்யாசாகர்.

19 CP VS2

14 வயது முதலே எம்எஸ்வி, இளையராஜா உட்பட இந்தியாவின் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1989ம் ஆண்டே ‘பூமனம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார் . ஆனாலும் 1994ல் வெளிவந்த ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம்தான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. அதன்பின்னர் வெளிவந்த நடிகர் அர்ஜுனின் கர்ணா, செங்கோட்டை, ஆயுத பூஜை, சுபாஷ், தாயின் மணிக்கொடி உள்பட பல பங்களுக்கு இசையமைத்தார். பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் தமிழில் தொடர் வெற்றி கிடைக்கவில்லை. இந்த சூழலில், மலையாளம், தெலுங்கில் அவரது இசையில் வெளியான திரைப்படங்கள் ஹிட்டடிக்க, அப்போது முதல் பிஸியாகிவிட்டார் வித்யாசாகர்.

   
ezgif 3 07d9472b1e

விஜய், அஜித், விக்ரம், மாதவன், ஜீவா, ஷாம், தொடங்கி ரஜினி, கமல் என நீண்ட வித்யாசாகரின் 2000க்குப் பிறகான இசை படையெடுப்பு, இந்தமுறை அவரை யாராலும் வெல்ல முடியாத சிம்ம சொப்பனமாக்குகிறது. தமிழ் திரை இசை ரசிகர்கள் அவரது பாடல்களை சிடி தேய்ந்து போகும் அளவுக்கு முணுமுணுக்கத் தொடங்கிவிடுகின்றனர்.எம்ஸ்வி – பாலச்சந்தர், இளையராஜா – பாரதிராஜா, ஏஆர் ரஹ்மான் – மணிரத்னம் வரிசையில் வித்யாசாகர் – தரணி காம்போ தமிழ் சினிமாவில் பல வரலாற்று வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.

lyricist yugabharathi

இந்த நிலையில், கவிஞர் யுகபாரதி, இசையமைப்பாளர் வித்யாசாகரை திட்டி எழுதிய பாடல் குறித்து சுவாரஸியமாக பதிவு செய்துள்ளார். 2002-ம் ஆண்டு மாதவன், மீராஜாஸ்மின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, வெளியான திரைப்படம் ரன். லிங்குசாமி இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியிருந்தார். முதன் முதலாக யுகபாரதியும், வித்யாசாகரும் சந்தித்துக் கொண்ட போது, யுகபாரதியை மதிக்கவே இல்லையாம் வித்யாசாகர். அதற்கு முன்பு தான் ஆனந்தம் படத்தில் பல்லாங்குழி பாடலுக்காக விருதுகள் பல பெற்று, கோலிவுட்டில் பேசுப்பட்ட கவிஞராக அவர் இருந்தக் காலகட்டம். ஆனால் அப்படி ஒரு பாட்டு இருக்கிறதா? இப்படி எல்லாம் பாட்டு எழுத முடியுமா என யுகபாரதியை அசிங்கப் படுத்தினாராம் வித்யாசாகர்.

maxresdefault 18

கோபத்தில் யுகபாரதி வீட்டிற்கு சென்று விட, இரவு இயக்குநர் லிங்குசாமி போன் செய்து அவரை சமாதானம் செய்ய, ஆயினும் கோபம் அடங்காத யுகபாரதி காதல் பிசாசே, காதல் பிசாசே என்ற பாடலில் வித்யாசாகரை திட்டி முழு பாட்டையும் எழுதினாராம். இப்பாடல் கம்போசிங்குக்கு செல்லும் போதே விபத்தில் சிக்கி பிறகு எழுந்து போயிருக்காராம் யுகபாரதி. அந்தப் பாடல் வரிகளை படித்து பார்த்த வித்யாசாகர், யுகபாரதியை ஆரத்தழுவி, இனி நான் இசையமைக்கும் அனைத்து பாடல்களுக்கும் நீங்கள் தான் வரி எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாராம். அன்று தொடங்கிய இவர்களது நெருக்கம், வித்யாசாகர் இசையில் யுகபாரதி 300 பாடல்களை எழுதியது வரை சென்றது.

author avatar
Archana