நடிகர் வடிவேலுவுக்கு வைகைப்புயல் என்ற பட்டம் இருக்கிறது. இப்போது வைகைப்புகார் ஆக மாறிக்கொண்டு இருக்கிறார். அவருடன் நடித்த பல நடிகர், நடிகையர் பலரும் அவர் மீதான புகார்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். அவருடன் சில படங்களில் காமெடி நடிகையாக நடித்தவர் பிரேமா பிரியா.
ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த பலரும் நெகட்டிவ் ஆக பேச காரணம், அதற்கான சூழலை அவர்தான் ஏற்படுத்தி இருக்கிறார். அந்த அளவுக்கு கசப்பான விஷயங்களை அவர் எங்களுக்கு செய்திருக்கிறார்.
வழக்கமாக ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் சம்பளத்தை டைரக்டர், தயாரிப்பாளர், மேனேஜர் முடிவு செய்வார்கள். ஆனால் வடிவேலு படத்தில் அவரது குழுவில் நடிக்கும் நடிகர், நடிகையர் சம்பளத்தை அவர்தான் முடிவு செய்தார். அவராக பேசி எங்களுக்கு சம்பளத்தை கூடுதலாக வாங்கித் தர மாட்டார்.
அதே நேரத்தில் அவர்களாக ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொடுத்தாலும், அப்படி கொடுக்காதீங்க, கம்மி பண்ணிக் கொடுங்க, என்று கூறி விடுவார். அவர் 10 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தாலும் அவருக்கு சாப்பாட்டுக்கோ, மருத்துவ செலவுகளுக்கோ கவலை இல்லை. ஆனால், நாங்கள் எல்லாம் அன்றாடம் பிழைப்புக்காக நடிப்பவர்கள். எங்களால் அவரை போல் சாப்பாடு, மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாது.
நான் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டைரக்டர், தயாரிப்பாளர், மேனேஜர் போன்றவர்களை தான் நேரடியாக சந்தித்து வாய்ப்பு கேட்பேன். நடிகர்களை சந்தித்து கேட்க மாட்டேன். விவேக்குடன் 3 படங்களில் நடித்தேன். ஆனால் அந்த வாய்ப்பு காமெடி ரைட்டர் ராஜகோபால், டைரக்டர் டிபி கஜேந்திரன் மூலம்தான் கிடைத்தது. விவேக் மிக நல்ல மனிதர்.
அநாவசியமான வார்த்தைகள் எதுவும் பேச மாட்டார். வடிவேலுவுடன் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டுமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவருடைய பர்சனல் வாழ்க்கையில் அவர் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். அதுபற்றி எனக்கு தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம், தேவையோ இல்லை. அது அவரது பிரச்னை என்று கூறியிருக்கிறார் காமெடி நடிகை பிரேமா பிரியா.