பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012- ஆம் ஆண்டு கும்கி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு லட்சுமி மேனன் ஆகியோர் நடித்தனர். கும்கி படத்திற்கு டி இமான் இசையமைத்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் பாடலாசிரியர் யுகபாரதி கும்கி படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதியது பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பிரபு சாலமன் என்னிடம் கூறும்போது தமிழில் இந்த மாதிரி பாடல் இதுவரை வந்திருக்கக் கூடாது.அப்படி பாடல் அமைக்க வேண்டும் என கூறினார்.
யானையுடன் ஊருக்குள் வரும் ஹீரோ முதன் முதலில் ஹீரோயினை பார்க்கிறான். அந்த சூழ்நிலையில்தான் ஒன்னும் புரியல சொல்ல தெரியல என்று தொடங்கும் பாடலை எழுதினேன். அதன் பிறகு யானை மேல் ஹீரோயின் ஏறியவுடன் வரும் சந்தோஷத்தை கூறும் விதமாக அய்யய்யோ ஆனந்தமே என்று வரிகளை கூறினேன். முதலில் அய்யய்யோ என்ற வார்த்தையை கேட்டு பிரபு சாலமன் ஆட்சேபனை தெரிவித்தார்.
அதன் பிறகு ஒரு சில காரணங்களை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். அந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக காதலை சொன்னதும் சொல்லிட்டாலே அவ காதல சொல்லும் போதே சுகம் தாங்கல என்ற வரியை எழுதினேன். அந்த பாடலில் காதல் என்ற வரியை நீக்கி விட்டால் மற்ற சொற்களின் பயன்பாடுகளை எப்படி வேணாலும் கையாளலாம். கடைசியாக வரும் சொய்ங் சொய்ங் என்ற பாடலில் நாம் மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேண்டும் மச்சான் என்ற வரி அமைந்திருக்கும்.
அந்த சமயம் இளம் காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதற்காக ஊரை விட்டு ஓடி சென்று வாழாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களது பிரேதத்தை வாங்க இரு குடும்பத்தினரும் சண்டை போடாமல் மருத்துவமனையில் இருக்கிறார்கள். அந்த செய்தியை நான் ஒரு செய்தித்தாளில் படித்தேன். அது என்னை ரொம்ப தொந்தரவு செய்தது. இதனால் அந்த வரியை பாடலுக்குள் கொண்டு வந்தேன். அதனை கேட்டதும் டைரக்டரும் என்னை ஆரத்தழுவி கட்டிப்பிடித்தார் என கூறியுள்ளார்.