சும்மா இருந்த நம்பியாரை வம்புக்கு இழுத்த MGR… நான் இல்லைனு தப்பித்து ஓடிய வில்லாதி வில்லன்…

By admin on புரட்டாதி 5, 2024

Spread the love

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனப்படும் MGR இந்தியாவின் பிரபலமான நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றியவர் MGR. தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்தை கொண்டிருப்பவர் MGR.

   

இளமைப்பருவத்தில் எம் ஜி ராமச்சந்திரன் அவரது மூத்த சகோதரர் எம் ஜி சக்கரபானி தங்கள் குடும்ப வறுமைக்காக ஒரு நாடக குழுவில் சேர்ந்தார்கள். நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் துணைவேடத்தில் அறிமுகமானார். பின்னர் 1940களில் முன்னணி நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். 1950 60 70களில் தனது அபாரமான நடிப்பினால் புகழின் உச்சிக்கே சென்றவர் MGR.

   

சமூக நீதி கருத்துக்களையும் திராவிட சிந்தனைகளையும் உள்ளடக்கிய கதை அம்சத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் MGR. இது தவிர இவரது படங்களில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும். இவர் மீது அன்பு வைத்திருக்கும் தமிழ் மக்களை ரசிகர்கள் என்று அல்ல பக்தர்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு MGRரை போற்றினர்.

 

1970 80களில் MGRக்கு சினிமா வட்டாரங்களில் மிகவும் மரியாதை இருந்தது. இயக்குனர் ஆனாலும் தயாரிப்பாளர்களானாலும் யாராக இருந்தாலும் MGRமதிப்பு கொடுத்து தான் ஒரு படத்தில் எல்லா முடிவையும் எடுப்பர். பாடல் ஆசிரியர்களான கவியரசு கண்ணதாசன் மற்றும் வாலி கூட தாங்கள் பாடல் எழுதிய பின்னர் MGR இடம் கொண்டு காட்டிவிட்டு தான் ரெக்கார்டிங் செய்வர்.

MGR உடன் அதிகமாக திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார். அப்படி ஒரு தடவை ஷூட்டிங்கில் இருக்கும்போது இயக்குனர் கே சங்கர். அவர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அதைப் பார்த்த MGR இயக்குனர் சங்கரிடம் யார்யா உனக்கு இந்த மாதிரி மாலை போட சொன்னது என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

சூட்டிங்காக தயாராகி கொண்டிருந்த நம்பியாரை பார்த்து எல்லாம் இவர் வேலை தானா இவர் தான் கண்டிப்பா உன்னை இப்படி பண்ணி இருப்பார் அப்படின்னு கூறினார். ஏனென்றால் நம்பியார் வருடா வருடம் தவறாமல் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு பல கன்னி சாமிகளையும் கூட்டி செல்பவர். அதனால் MGR அப்படி கூறினார். உடனே இயக்குனர் சங்கர் அதெல்லாம் ஒன்னும் இல்லங்க ஐயா அவரெல்லாம் எதுவும் சொல்லல நானே தான் போட்டுக்கிட்டேன் அப்படின்னு கூறியிருக்கிறார் கே சங்கர். என்னடா இது வம்பா போச்சு நம்ம எதுவுமே செய்யாம நம்மளை வம்பு இழுக்கிறாரே MGR என்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டாராம் நம்பியார்.