பிரசாந்த் முதல் மைக் மோகன் வரை.. GOAT பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

By admin on புரட்டாதி 5, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . கோட் படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு:

   

கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அர்ச்சனா கல்பாத்தி 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளாராம். AI தொழில்நுட்பம் மூலம் வெங்கட் பிரபு வித்தியாசமான முயற்சியில் படம் எடுத்துள்ளார். படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

   

 

பிரபுதேவா:

பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா பொதுவாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 8 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார். ஆனால் கோட் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பிரசாந்த்:

90’ஸ் காலகட்டத்தில் விஜயை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர் பிரசாந்த். ஆனால் ஒரு சில காரணங்களால் சினிமாவில் பிரசாந்த் சருக்கல்களை சந்தித்தார். பிரசாந்த் ஹீரோவாக நடித்த அந்தகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். கோட் திரைப்படத்தில் நடிக்க பிரசாந்துக்கு 75 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெயராம்:

இதனை அடுத்து மலையாள நடிகரான ஜெயராம் ஏற்கனவே விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கு மேல் அதிகாரியாக நடித்திருந்தார். இவர் தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கோட் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயராமுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அஜ்மல் அமீர்:

இளம் நடிகரான அஜ்மல் அமீர் முதல் முறையாக கோட் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

article_image9

மைக் மோகன்:

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். இவர் கோட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மைக் மோகனுக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சினேகா:

அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். ஏற்கனவே வசீகரா படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். கோட் படத்தில் நடிக்க சினேகாவுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.